< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்..!!
|10 Oct 2023 9:37 AM IST
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஷாங்காய்,
12-வது ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டென்னிஸ் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டேனியல் எவன்ஸ் உடன் விளையாடினார். இந்த ஆட்டத்தில் 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அல்காரஸ் தனது அடுத்த ஆட்டத்தில் பல்கேரிய வீரரான கிரிகர் டிமிட்ரோவ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.