< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; காலிறுதியில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி
|10 Oct 2024 10:04 PM IST
கார்லஸ் அல்காரஸ் - தாமஸ் மகக் ஆகியோர் மோதினர்.
பீஜிங்,
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் , செக் நாட்டின் தாமஸ் மகக் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தாமஸ் மகக் சிறப்பாக விளையாடினார் . இதனால் 7(7) - 6(5) ,7 - 5 என்ற செட் கணக்கில் தாமஸ் மகக் வெற்றி பெற்றார். இதனால் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார்.