< Back
டென்னிஸ்
டென்னிஸ்
உலக டேபிள் டென்னிஸ் போட்டிக்கு சரத்கமல், மணிகா தகுதி
|12 Jan 2023 1:27 AM IST
உலக டேபிள் டென்னிஸ் போட்டிக்கு சரத்கமல், மணிகா தகுதி பெற்றுள்ளனர்.
லுசாயில்,
ஆசிய கான்டினென்டல் டேபிள் டென்னிஸ் போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா 11-2, 5-11, 2-11, 5-11, 13-1, 11-9, 11-8 என்ற செட் கணக்கில் சீனதைபேயின் சென் ஜூ யுவை போராடி வென்றார். இதே போல் இந்தியாவின் மணிகா பத்ரா தன்னை எதிர்த்த ஹாங்காங்கின் செங்சூவை 13-11, 11-9, 11-6, 11-6, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
ஆண்கள் ஒற்றையரில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் 13-11, 11-3, 10-12, 11-7, 11-6 என்ற செட் கணக்கில் ஈரானின் அமாதியன் அமினை சாய்த்தார். வெற்றி பெற்ற இவர்கள் 3 பேரும் மே மாதம் நடக்கும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர். கலப்பு இரட்டையரில் மணிகா-ஜி.சத்யன், இரட்டையரில் சத்யன்- சரத்கமல் ஆகியோரும் உலக போட்டி இடத்தை உறுதி செய்தனர்.