கனடா ஓபன் டென்னிஸ்: சானியா- மேடிசன் இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
|சானியா- மேடிசன் இணை காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஒட்டாவா,
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் அமெரிக்கவின் மேடிசன் கீஸுடன் இணைந்து விளையாடி வருகிறார். இந்த தொடரில் நேற்று முன்தினம் நடந்த முதல்சுற்றில் சானியா- மேடிசன் இணை வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தனர்.
இந்த நிலையில் காலிறுதிக்கு முந்தய சுற்றில் இந்திய அமெரிக்க ஜோடி முன்னணி வீராங்கனைகள் வெரோனிகா குடெர்மெடோவா மற்றும் எலிஸ் மெர்டென்சை இன்று எதிர்கொண்டனர். இந்த போட்டியில் சானியா- மேடிசன் இணை 3-6, 6-4, 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.