நான் "ஓரினசேர்க்கையாளர்" என வெளிப்படையாக அறிவித்த பிரபல டென்னிஸ் வீராங்கனை
|25 வயதான டென்னிஸ் வீராங்கனை டரியா கசட்கினா தான் ஒரு ஓரினசேர்க்கையாளர் என அறிவித்து உள்ளார்.
மாஸ்கோ
ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான டரியா கசட்கினா, தான் ஒரு பெண்ணுடன் டேட்டிங் செய்வதாக வீடியோ பேட்டியில் கூறியுள்ளார். அதாவது, தான் ஒரு ஓரினச்சேர்கையாளர் என்பதை டென்னிஸ் வீராங்கனை அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது வரைஓரினசேர்க்கை உறவுகள் பற்றி வெவ்வேறு கருத்துகளும், எதிர்ப்புகளும் நிலவி வரும் நிலையில், புகழ்பெற்ற விளையாட்டு வீராங்கனை தான் ஒரு ஒரின சேர்க்கையாளர் என்றும் ஒரு பெண்ணை டேட்டிங் செய்து வருவதாகவும் ஒரு பேட்டியில் கூறியது உலகம் முழுவதிலும் வரவேற்பைப் பெற்றது.
25 வயதான டென்னிஸ் வீராங்கனை டரியா கசட்கினா, கடந்த மாதம் நடைபெற்ற பிரெஞ்சு ஒப்பன் டென்னிஸ் போட்டியின் போது, இது நாள் வரை மறைத்து வைத்திருந்த உண்மையை வெளியே கூற வேண்டும் என்று முடிவு செய்ததாகக் கூறி ரஷிய நாட்டைச் சேர்ந்த பிரபலமான சாக்கர் விளையாட்டுப் போட்டியின் ஸ்ட்ரைக்கராக ஆடி வரும் நாட்யா கார்போவா என்ற வீராங்கனையை தான் டேட்டிங் செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதையும் குறிப்பிட்டார்.
கசட்கினா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நடாலியா ஜாபியாகோவைத் தழுவிய புகைப்படத்தை வெளியிட்டார்.
டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் தரவரிசையில் டரியா கசட்கினா முதல் 20 இடங்களுக்கு உள்ளார். மேலும், 16 மே 2022 அன்று மீண்டும் நம்பர் 1 ரஷ்ய வீராங்கனை ஆனார். டரியா கசட்கினா கிரெம்ளின் கோப்பை மற்றும் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டிராஃபி ஆகிய மிகப்பெரிய பட்டங்களை வென்றுள்ளார்.