< Back
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை கண்டு ரசித்த ரோகித் சர்மா
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை கண்டு ரசித்த ரோகித் சர்மா

தினத்தந்தி
|
12 July 2024 8:14 PM IST

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது

லண்டன்,

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்று வரும் அரையிறுதி ஆட்டத்தில் மெத்வதேவ் - அல்காரஸ் ஆகியோர் மோதுகின்றனர்.

இந்த நிலையில், இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கண்டு ரசித்து வருகிறார் . இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்