< Back
டென்னிஸ்
ஹாம்பர்க் ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் : இறுதி போட்டியில் போபண்ணா, மிடில்கூப் ஜோடி தோல்வி

Image Courtesy : AFP 

டென்னிஸ்

ஹாம்பர்க் ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் : இறுதி போட்டியில் போபண்ணா, மிடில்கூப் ஜோடி தோல்வி

தினத்தந்தி
|
25 July 2022 6:07 PM IST

போபண்ணா- மிடில்கூப் ஜோடி 2-வது இடத்தோடு இந்த தொடரை நிறைவு செய்துள்ளனர்.

ஹாம்பர்க்,

ஹாம்பர்க் ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவின் போபண்ணா, - நெதர்லாந்தின் மிடில்கூப் ஜோடி தோல்வி அடைந்தனர். ஹாரி ஹெலியோவாரா, லாயிட் கிளாஸ்பூல் ஜோடியை எதிர்த்து களம் கண்ட இந்திய- நெதர்லாந்து இணை 2-6, 4-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தனர்.

இதன் மூலம் போபண்ணா- மிடில்கூப் ஜோடி 2-வது இடத்தோடு இந்த தொடரை நிறைவு செய்துள்ளனர்.குறிப்பாக இந்திய வீரர் போபண்ணா இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். 2022 ஆம் ஆண்டில் போபண்ணாவின் நான்காவது இறுதிப் போட்டி இதுவாகும்.

4 இறுதி போட்டிகளில் இந்த ஆண்டின் தொடக்கத்தில், அடிலெய்டு மற்றும் மகாராஷ்டிராவில் நடைபெற்ற போட்டியில் சக இந்திய டென்னிஸ் வீரரான ராம்குமார் ராமநாதனுடன் போபண்ணா இரண்டு பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்