< Back
டென்னிஸ்
ஏ.டி.பி., டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் போபண்ணா நம்பர் 1
டென்னிஸ்

ஏ.டி.பி., டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் போபண்ணா 'நம்பர் 1'

தினத்தந்தி
|
30 Jan 2024 1:16 AM IST

இரட்டையர் தரவரிசையில் இந்திய வீரர் 43 வயதான ரோகன் போபண்ணா 2 இடங்கள் முன்னேறி முதல்முறையாக ‘நம்பர் 1’ இடத்தை பிடித்துள்ளார்.

நியூயார்க்,

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை. ஜோகோவிச் (செர்பியா) முதலிடத்திலும், கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 2-வது இடத்திலும், டேனில் மெட்விடேவ் (ரஷியா) 3-வது இடத்திலும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஜானிக் சினெர் (இத்தாலி) 4-வது இடத்திலும், ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) 5-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

இரட்டையர் தரவரிசையில் இந்திய வீரர் 43 வயதான ரோகன் போபண்ணா 2 இடங்கள் முன்னேறி முதல்முறையாக 'நம்பர் 1' இடத்தை பிடித்துள்ளார். மேத்யூ எப்டெனுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் போபண்ணாவுக்கு இந்த உயர்வு கிடைத்துள்ளது. இரட்டையரில் அதிக வயதில் 'நம்பர் ஒன்' அரியணையில் ஏறியவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் போலந்தின் ஸ்வியாடெக் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான பெலாரசின் சபலென்கா 2-வது இடத்திலும் தொடருகிறார்கள். அமெரிக்காவின் கோகோ காப் ஒரு இடம் உயர்ந்து 3-வது இடம் வகிக்கிறார்.

மேலும் செய்திகள்