< Back
டென்னிஸ்
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி

Image Courtesy: AFP

டென்னிஸ்

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
3 Nov 2022 9:30 PM IST

ரபேல் நடால் அமெரிக்க வீரரான டாமி பாலிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

பாரிஸ்,

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரிஸில் கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்கள் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் கடந்த 31ஆம் தேதி முதல் ரவுண்டு ஆப் 62 சுற்று போட்டிகள் தொடங்கியது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ரவுண்டு ஆப் 32 சுற்று (2-வது சுற்று) ஆட்டம் ஒன்றில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் அமெரிக்க வீரரான டாமி பாலிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் டாமி பால் 3-6, 7-6, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

அதே போல் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டி ஒன்றில் (ரவுண்டு ஆப் 16) உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்