< Back
டென்னிஸ்
டென்னிஸ்
மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்பும் ரபேல் நடால்!
|3 Dec 2023 3:51 PM IST
நடால் டிசம்பர் 31 முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ள பிரிஸ்பேன் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் விளையாட உள்ளார்.
மாட்ரிட்,
22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஸ்பெயினை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் ஏறக்குறைய 1 ஆண்டுக்கு பின் மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்ப உள்ளார்.
காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற எந்த வித டென்னிஸ் தொடரிலும் பங்கேற்காத நிலையில், குணமடைந்த பிறகு மீண்டும் களத்திற்கு திரும்ப உள்ளார்.
அதன்படி நடால் டிசம்பர் 31 முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ள பிரிஸ்பேன் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் விளையாட உள்ளார்.