< Back
டென்னிஸ்
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் - அரை இறுதிக்குள் நுழைந்தார் கிரீஸ் வீரர் சிட்சிபஸ்
டென்னிஸ்

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் - அரை இறுதிக்குள் நுழைந்தார் கிரீஸ் வீரர் சிட்சிபஸ்

தினத்தந்தி
|
4 Nov 2022 10:03 PM IST

நாளை நடைபெறும் அரை இறுதிப் போட்டியில் டாமி பால்-சிட்சிபஸ் மோத உள்ளனர்.

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 'பாரிஸ் மாஸ்டர்ஸ்' டென்னிஸ் தொடர் கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்கள் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் கடந்த 31-ந்தேதி முதல், ரவுண்டு ஆப் 62 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப்-16 (3-வது சுற்று) ஆட்டத்தில், பிரான்ஸ் வீரர் கொரன்டீன் மவுடெட் உடன் கிரீஸ் வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபஸ் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 7-6 என்ற செட் கணக்கில் சிட்சிபஸ் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தார்.

இதே போல் மற்றொரு ரவுண்ட் ஆப் சுற்றில், அமெரிக்க வீரர் டாமி பால் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து நாளை நடைபெறும் அரை இறுதிப் போட்டியில் டாமி பால்-சிட்சிபஸ் மோத உள்ளனர்.

மேலும் செய்திகள்