< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா இணை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!
|5 Nov 2023 9:28 AM IST
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
பாரீஸ்,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது.
இதில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரரான மேத்யூ எப்டன் இணை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அரையிறுதியில் ரோகன் போபண்ணா இணை 6-7, 6-4 மற்றும் 10-6 என்ற செட் கணக்கில் ஹாரி ஹெலியோவாரா - மேட் பாவிக் இணையை போராடி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இவர்கள் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சாண்டியாகோ கோன்சாலஸ் - எட்வார்ட் ரோஜர் வாசெலின் இணையுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.