< Back
டென்னிஸ்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் - கிரிகர் டிமிட்ரோவ் பலப்பரீட்சை!

image courtesy; AFP 

டென்னிஸ்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் - கிரிகர் டிமிட்ரோவ் பலப்பரீட்சை!

தினத்தந்தி
|
5 Nov 2023 12:00 PM IST

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது.

இதில் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் மற்றும் பல்கேரிய வீரரான கிரிகர் டிமிட்ரோவ் முன்னேறியுள்ளனர்.

ஜோகோவிச் அரையிறுதி ஆட்டத்தில் ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். டிமிட்ரோவ் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இவர்களுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்றிரவு நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்