< Back
டென்னிஸ்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்..!!

image courtesy; AFP

டென்னிஸ்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்..!!

தினத்தந்தி
|
3 Nov 2023 11:20 AM IST

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

பாரீஸ் ,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி வரும் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 வீரரான செர்பிய நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச், டச்சு நாட்டை சேர்ந்த டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

இதில் யாரும் எதிர்பாராதவிதமாக முதல் செட்டை கிரீக்ஸ்பூர் கைப்பற்றி நம்பர் 1 வீரருக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் சுதாரித்து விளையாடிய ஜோகோவிச் 2-வது செட்டை டை பிரேக்கரில் போராடி கைப்பற்றினார் . இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது.

3-வது செட்டை ஜோகோவிச் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றி பெற்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 4-6, 7-6 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். அவர் காலிறுதியில் நடப்பு சாம்பியனான ஹோல்கர் ரூன் உடன் மோத உள்ளார்.

மேலும் செய்திகள்