< Back
டென்னிஸ்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன்..!

கோப்புப்படம் 

டென்னிஸ்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன்..!

தினத்தந்தி
|
6 Nov 2023 5:51 AM IST

இறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச், பல்கேரியா வீரர் கிரிகோர் டிமிட்ரோவுடன் மோதினார்.

பாரீஸ்,

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் 'நம்பர் ஒன்' வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பல்கேரியா வீரர் கிரிகோர் டிமிட்ரோவுடன் மோதினார்.

இந்த போட்டியில் ஜோகோவிச், 6-4, 6-3 என்ற நேர் செட்டில் டிமிட்ரோவை தோற்கடித்து வெற்றி பெற்றார். இதன் மூலம் 7-வது முறையாக அவர் மகுடம் சூடினார். அவருக்கு ரூ.8 கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது.

மொத்தத்தில் ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் டென்னிசில் ஜோகோவிச் கைப்பற்றிய 40-வது பட்டம் இதுவாகும்.

மேலும் செய்திகள்