< Back
டென்னிஸ்
டென்னிஸ்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் சின்சினாட்டி டென்னிசில் இருந்து ஜோகோவிச் விலகல்
|14 Aug 2022 1:30 AM IST
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் சின்சினாட்டி டென்னிசில் இருந்து ஜோகோவிச் விலகி இருக்கிறார்.
அமெரிக்காவின் சின்சினாட்டியில் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது. அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 2 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) விலகி இருக்கிறார். தற்போதைய சூழலில் கொரோனா தடுப்பூசி போட்ட வெளிநாட்டினர் மட்டுமே அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தொடர்ந்து மறுத்து வரும் ஜோகோவிச் வேறு வழியின்றி சின்சினாட்டி டென்னிசில் இருந்து 'ஜகா' வாங்கி இருக்கிறார்.கொரோனா தடுப்பு பயணக்கட்டுப்பாடு காரணமாக வருகிற 29-ந்தேதி நியூயார்க்கில் தொடங்கும் 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதிலும் அவருக்கு சிக்கல் உருவாகியுள்ளது.