< Back
டென்னிஸ்
டென்னிஸ்
இந்திய பெண்கள் டென்னிஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
|7 March 2023 1:58 AM IST
இந்திய பெண்கள் டென்னிஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
பில்லி ஜீன் கிங் கோப்பைக்கான (முன்பு பெட் கோப்பை என்று அழைக்கப்பட்டது) ஆசிய ஓசியானா குரூப் 1 சுற்று டென்னிஸ் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி தொடங்குகிறது. பெண்கள் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் குருகிராமில் நடந்த ஐ.டி.எப். டென்னிசில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய 23 வயது வைதேகி சவுத்ரிக்கு அணியில் இடம் கிடைத்து இருக்கிறது. சீனியர் வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா, கம்ரன் கவுர் தண்டி மற்றும் சஹஜா யமாபாலி, ருதுஜா போசேல் ஆகியோரும் அணியில் அங்கம் வகிக்கின்றனர்.
முன்னாள் கேப்டன் விஷால் உப்பல் நீக்கப்பட்டு ஷாலினி தாக்குர் சாவ்லா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளராக ராதிகா கனித்கர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.