இண்டியன்வெல்ஸ் ஓபன்: வெற்றியுடன் தொடங்கிய நடப்பு சாம்பியன் அல்காரஸ்
|அல்காரஸ் அடுத்த சுற்று ஆட்டத்தில் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோத உள்ளார்.
இண்டியன்வெல்ஸ்,
பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), மட்டியோ அர்னால்டி (இத்தாலி) உடன் மோதினார்.
இதில் முதல் செட்டில் அதிர்ச்சி தோல்வி கண்ட அல்காரஸ் அதன் பின் நடைபெற்ற 2 செட்டுகளையும் எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அல்காரஸ் 6-7, 6-0 மற்றும் 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இவர் தனது அடுத்த சுற்று ஆட்டத்தில் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோத உள்ளார்.
இதில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு முன்னணி வீராங்கனையான ஆன்ஸ் ஜபேர் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.