< Back
டென்னிஸ்
டென்னிஸ்
நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்: ஆண்ட்ரி ரூப்லெவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
|12 Aug 2024 11:10 AM IST
ரூப்லெவ் அரையிறுதியில் மேட்டியோ அர்னால்டி உடன் மோதினார்.
டொரண்டோ,
கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரி ரூப்லெவ், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டி உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரூப்லெவ் 6-4 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.