< Back
டென்னிஸ்
மான்டெர்ரி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார்  நோஸ்கோவா

Image : AFP 

டென்னிஸ்

மான்டெர்ரி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் நோஸ்கோவா

தினத்தந்தி
|
25 Aug 2024 10:57 PM IST

இறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, நியூசிலாந்தின் லுலு சன் உடன் மோதினார்.

மெக்சிகோ,

மான்டெர்ரி ஓபன் டென்னிஸ் தொடர் மெக்சிகோவில் நடைபெற்றது.இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, நியூசிலாந்தின் லுலு சன் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாகின ஆட்டத்தை வெளிப்படுத்திய லிண்டா நோஸ்கோவா 7(8)-6(6), 6-4 என்ற நேர் செட் கணக்கில் லுலு சன்னை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

மேலும் செய்திகள்