< Back
டென்னிஸ்
டென்னிஸ்
மான்டெர்ரி ஓபன் டென்னிஸ்; லிண்டா நோஸ்கோவா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
|24 Aug 2024 1:54 PM IST
மான்டெர்ரி ஓபன் டென்னிஸ் தொடர் மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது.
மெக்சிகோ,
மான்டெர்ரி ஓபன் டென்னிஸ் தொடர் மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, அமெரிக்காவின் எம்மா நவரோ உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிண்டா நோஸ்கோவா 7-6 (9-7), 7-5 என்ற செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் லிண்டா நோஸ்கோவா, நியூசிலாந்தின் லுலு சன் உடன் மோத உள்ளார்.