< Back
டென்னிஸ்
டென்னிஸ்
மாண்டேகார்லா டென்னிஸ்: ரஷிய வீரர் ரூப்லெவ் சாம்பியன்
|17 April 2023 3:52 PM IST
மாண்டேகார்லா டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் ரூப்லெவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
மாண்டேகார்லோ,
மாண்டேகார்லா மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ், 9-ம் நிலை வீரர் ஹோல்ஜர் ருனே (டென்மார்க்) உடன் மோதினார்.
சரிவில் இருந்து மீண்டு வந்து ரூப்லெவ், 5-7, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ருனேவை தோற்கடித்து கோப்பையை தட்டிச் சென்றார். இது ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் போட்டியாகும். இத்தகைய போட்டியில் ரூப்லெவ் மகுடம் சூடுவது இதுவே முதல் முறையாகும். அவருக்கு ரூ.8 கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது.