மான்டேகார்லோ டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரூப்லெவ்-ருனே மோதல்
|மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
மான்டேகார்லோ,
மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ், 10-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை எதிர்கொண்டார்.
இதில் சரிவில் இருந்து மீண்டு வந்த ஆந்த்ரே ரூப்லெவ் 5-7, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் டெய்லர் பிரிட்சை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மழையால் தடைபட்டு நடந்த இந்த ஆட்டம் 2 மணி 7 நிமிடம் அரங்கேறியது.
மற்றொரு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனேவுடன் மோதினார். இந்த போட்டியில் ருனே 1-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறவுள்ள இறுதி போட்டியில் ரூப்லெவ், ருனேவுடன் மோதுகிறார்.