< Back
டென்னிஸ்
டென்னிஸ்
மான்டி கார்லோ டென்னிஸ்: நம்பர் 1 வீரர் காலிறுதிக்கு முன்னேற்றம்
|11 April 2024 9:40 PM IST
ஜோகோவிச் காலிறுதி ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினார் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
மொனாக்கோ,
களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் (செர்பியா), லோரென்சோ முசெட்டி (இத்தாலி) உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-5 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
இவர் தனது காலிறுதி ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினார் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.