< Back
டென்னிஸ்
டென்னிஸ்
மான்டி கார்லோ டென்னிஸ்: மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி
|11 April 2024 6:44 PM IST
மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது
மொனாக்கோ,
களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், மற்றொரு ரஷிய வீரரான காரென் கச்சனோவுடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் மெத்வதேவ் 3-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதன்மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.காரென் கச்சனோவ் காலிறுதிக்கு முன்னேறினார்.