< Back
டென்னிஸ்
மான்டி கார்லோ டென்னிஸ்: பிரதான சுற்றுக்கு இந்திய வீரர் சுமித் நாகல் தகுதி

சுமித் நாகல் (கோப்புப்படம் ANI)

டென்னிஸ்

மான்டி கார்லோ டென்னிஸ்: பிரதான சுற்றுக்கு இந்திய வீரர் சுமித் நாகல் தகுதி

தினத்தந்தி
|
8 April 2024 2:45 AM IST

இந்திய வீரர் சுமித் நாகல், அர்ஜென்டினாவின் அகோஸ்டாவை வீழ்த்தி பிரதான சுற்றுக்குள் நுழைந்தார்.

மான்டி கார்லோ,

களிமண் தரையில் நடக்கும் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் தொடங்கியுள்ளது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் உலக தரவரிசையில் 95-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சுமித் நாகல், 55-வது இடத்தில் இருக்கும் பேகுன்டோ டயஸ் அகோஸ்டாவை (அர்ஜென்டினா) சந்தித்தார்.

2 மணி 25 நிமிடம் நீடித்த இந்த மோதலில் சுமித் நாகல் 7-5, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் அகோஸ்டாவை வீழ்த்தி பிரதான சுற்றுக்குள் நுழைந்தார். இதன் மூலம் 42 ஆண்டுக்கு பிறகு மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிசில் பிரதான சுற்றில் கால் பதித்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

இதற்கு முன்பு 1982-ம் ஆண்டில் இந்திய ஜாம்பவான் ரமேஷ் கிருஷ்ணன் இந்த போட்டியில் விளையாடி இருந்தார். 26 வயதான சுமித் நாகல் முதல் சுற்றில் மேட்டியோ அர்னால்டியை (இத்தாலி) எதிர்கொள்கிறார்.

மேலும் செய்திகள்