< Back
டென்னிஸ்
டென்னிஸ்
மான்டி கார்லோ டென்னிஸ்:அரைஇறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
|14 April 2024 4:34 AM IST
மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்து வருகிறது
மான்டி கார்லோ,
களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரரும், 2 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 4-6, 6-1, 4-6 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டிடம் (நார்வே) அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜானிக் சினெரை (இத்தாலி) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.