< Back
டென்னிஸ்
மான்டி கார்லோ டென்னிஸ்; ஜன்னிக் சின்னெரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

Image Courtesy: AFP 

டென்னிஸ்

மான்டி கார்லோ டென்னிஸ்; ஜன்னிக் சின்னெரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

தினத்தந்தி
|
13 April 2024 8:37 PM IST

களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.

மொனாக்கோ,

களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஒரு அரையிறுதி ஆட்டத்தில் கிரீக் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் ஜன்னிக் சின்னெரை எதிர்கொண்டார். இவ்த்தை இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய சிட்சிபாஸ், 2வது செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார்.

இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அபாரமாக ஆடிய சிட்சிபாஸ் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் இத்தாலியின் ஜன்னிக் சின்னெரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்