< Back
டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்; இறுதிப்போட்டியில் ரைபகினா அதிர்ச்சி தோல்வி

Image Courtesy: AFP

டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்; இறுதிப்போட்டியில் ரைபகினா அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
31 March 2024 6:36 AM IST

பெண்கள் ஒற்றையர் பிரிவில் டேனியல் காலின்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

மியாமி,

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் கஜகஸ்தானை சேர்ந்த முன்னணி வீராங்கனையான எலெனா ரைபகினா அமெரிக்காவை சேர்ந்த டேனியல் காலின்ஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரைபகினா யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 5-7, 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டார். இதன் மூலம் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் டேனியல் காலின்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

மேலும் செய்திகள்