< Back
டென்னிஸ்
டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரைபகினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
|30 March 2024 12:27 AM IST
இறுதிப்போட்டியில் ரைபகினா, டேனியல் காலின்சுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
மியாமி,
அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டி ஒன்றில் கஜகஸ்தான் முன்னணி வீராங்கனையான ரைபகினா, பெலாரசை சேர்ந்த விக்டோரியா அசரென்கா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை ரைபகினா கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை அசரென்கா கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற 3-வது செட்டை டை பிரேக்கர் வரை போராடி ரைபகினா கைப்பற்றி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டத்தில் ரைபகினா 6-4, 0-6 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இவர் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனையான டேனியல் காலின்சுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.