< Back
டென்னிஸ்
டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்; மகளிர் ஒற்றையர் பிரிவில் ரைபகினா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|24 March 2024 2:19 PM IST
ரைபகினா 4-வது சுற்று ஆட்டத்தில் மேடிசன் கீஸ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
மியாமி,
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் முன்னணி வீராங்கனையான ரைபகினா அமெரிக்க வீராங்கனையான டெய்லர் டவுன்சென்ட் உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ரைபகினா கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை டெய்லர் கைப்பற்றினார். இதனால் 3-வது செட் எதிர்பார்ப்புக்குள்ளானது. இதனை ரைபகினா கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் ரைபகினா 6-3, 6-7 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் டெய்லரை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
இவர் 4-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான மேடிசன் கீஸ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.