< Back
டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்: ரஷிய வீரர் மெட்விடேவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

Image Courtesy : @Lacoste twitter

டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்: ரஷிய வீரர் மெட்விடேவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
27 March 2023 2:43 AM IST

ஸ்பெயின் வீரர் கார்பல்லேஸ் பாவ்னாவை 2-வது சுற்றில் மெட்விடேவ் வீழ்த்தினார்.

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் டேனில் மெட்விடேவ்(ரஷியா), கார்பல்லேஸ் பாவ்னா(ஸ்பெயின்) உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெட்விடேவ், 6-1, 6-2 என்ற நேர் செட்டில் ஸ்பெயின் வீரர் கார்பல்லேஸ் பாவ்னாவை துவம்சம் செய்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்