< Back
டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்: பெகுலா, லினெட் 3-வது சுற்றில் வெற்றி
டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்: பெகுலா, லினெட் 3-வது சுற்றில் வெற்றி

தினத்தந்தி
|
26 March 2023 5:58 PM IST

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

மியாமி,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான டேனியல் காலின்ஸ் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெகுலா 6-1, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் காலின்சை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

மற்றொரு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை மேக்டா லினெட், பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவுடன் மோதினார். இந்த போட்டியில் லினெட் 7-6 (7-3), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் அசரென்காவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

நாளை நடைபெறவுள்ள கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெசிகா பெகுலா, மேக்டா லினெட்டை சந்திக்கிறார்.

மேலும் செய்திகள்