< Back
டென்னிஸ்
டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மெத்வதேவ் சாம்பியன்
|3 April 2023 6:09 AM IST
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
மியாமி,
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் டேனில் மெத்வதேவ் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.