< Back
டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்; இறுதி போட்டிக்கு முன்னேறினார் டேனில் மெத்வதேவ்
டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்; இறுதி போட்டிக்கு முன்னேறினார் டேனில் மெத்வதேவ்

தினத்தந்தி
|
1 April 2023 1:11 PM IST

அமெரிக்காவில் நடந்து வரும் மியாமி ஓபன் ஆடவர் டென்னிஸ் இறுதி போட்டிக்கு டேனில் மெத்வதேவ் முன்னேறி உள்ளார்.

மியாமி,

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் போட்டி ஒன்றில் டேனில் மெத்வதேவ் மற்றும் கேரன் கச்சனோவ் ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில், 7-6(5), 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு மெத்வதேவ் முன்னேறினார். போட்டியின்போது, முதல் செட்டை மெத்வதேவ் கைப்பற்றியபோதும், 2-வது செட்டை கச்சனோவ் தன்வசப்படுத்தினார்.

இதனால், இறுதி போட்டிக்கு செல்லும் வீரர் யார் என்ற பரபரப்புடன் 3-வது செட்டுக்கான போட்டி நடந்தது. இதில், மெத்வதேவ் அதிரடியாக விளையாடி 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.

இதனால், மெத்வதேவ் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். அவர் நாளை நடைபெற கூடிய சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான போட்டியில் ஜான்னிக் சின்னரை எதிர்த்து விளையாட உள்ளார்.

மேலும் செய்திகள்