< Back
டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்; கோகோ காப், இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

Image Courtesy: AFP

டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்; கோகோ காப், இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
26 March 2024 2:26 PM IST

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

மியாமி,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்று நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் ரஷியாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட இகா ஸ்வியாடெக் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 4-6, 2-6 என்ற செட் கணக்கில் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

ரவுண்டா ஆப் 16 சுற்றில் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப் பிரான்சின் கரோலின் கார்சியாவிடம் 3-6, 6-1, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்