< Back
டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்; எலெனா ரைபாகினா அரையிறுதிக்கு முன்னேற்றம்

Image Courtesy: AFP

டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்; எலெனா ரைபாகினா அரையிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
27 March 2024 8:09 PM IST

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

மியாமி,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தானின் எலெனா ரைபாகினா கிரேக்க டென்னிஸ் வீராங்கனையான மரியா சக்காரியை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய ரைபகினா 2வது செட்டை 6-7 (4-7) என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட் பரபரப்பாக நடைபெற்றது.

இந்த செட்டில் முன்னணி வீராங்கனையான ரைபகினா 6-4 என்ற புள்ளிக்கணக்கில் மரியா சக்காரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ரைபகினா பெலாரசின் விக்டோரியா அசரென்காவை எதிர்கொள்கிறார்.

மேலும் செய்திகள்