< Back
டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் மெட்விடேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

image courtesy:AFP

டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் மெட்விடேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
28 March 2024 2:03 AM IST

மெட்விடேவ் தொடர்ந்து 4-வது முறையாக மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவருமான டேனில் மெட்விடேவ் (ரஷியா) 7-6 (7-5), 6-0 என்ற நேர்செட்டில் டோமினிக் கோப்பெரை (ஜெர்மனி) தோற்கடித்தார்.

இதன் மூலம் சர்வதேச போட்டியில் 350-வது வெற்றியை ருசித்த மெட்விடேவ் தொடர்ந்து 4-வது முறையாக இந்த தொடரின் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

மேலும் செய்திகள்