< Back
டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் போபண்ணா ஜோடி தோல்வி
டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் போபண்ணா ஜோடி தோல்வி

தினத்தந்தி
|
27 March 2023 3:16 AM IST

ரோகன் போபண்ணா-மேத்யூ எப்டென் கூட்டணி முதல் சுற்றில் தோல்வியடைந்தது.

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் கூட்டணி முதல் சுற்றில் 5-7, 6-4, 4-10 என்ற செட் கணக்கில் கெவின் கிராவிட்ஸ் (ஜெர்மனி) - பேப்ரிஸ் மார்ட்டின் (பிரான்ஸ்) ஜோடியிடம் வீழ்ந்தது.

அண்மையில் தனது 43-வது வயதில் இண்டியன்வெல்ஸ் டென்னிசில் மகுடம் சூடி சாதனை படைத்த போபண்ணா அதன் தொடர்ச்சியாக நடந்து வரும் மியாமியில் முதல் சுற்றை கூட தாண்ட முடியாமல் வெளியேறி இருக்கிறார்.

மேலும் செய்திகள்