< Back
டென்னிஸ்
டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்; ஆண்ட்ரே ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி
|23 March 2024 8:08 PM IST
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
மியாமி,
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 64 சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவை சேர்ந்த முன்னணி வீரரான ஆண்ட்ரே ரூப்லெவ் செக் குடியரசின் தாமஸ் மச்சாக்கை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரூப்லெவ் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் தாமஸ் மச்சாக்கிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.