< Back
டென்னிஸ்
டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்; அலெக்சாண்டர் ஸ்வெரேவ், கார்லஸ் அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்
|27 March 2024 4:18 PM IST
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
மியாமி,
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் நடைபெற்றது.
இதில் ஒரு ஆட்டத்தில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ரஷியாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஸ்வெரேவ் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் கரேன் கச்சனோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்த சுற்றில் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லோரென்சோ முசெட்டியை வீழ்த்தி கார்லஸ் அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேறினார்.