< Back
டென்னிஸ்
மல்லோர்கா ஓபன்: காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

கோப்புப்படம்

டென்னிஸ்

மல்லோர்கா ஓபன்: காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

தினத்தந்தி
|
26 Jun 2024 7:46 PM IST

ஸ்பெயின் நாட்டில் மல்லோர்கா சாம்பியன்ஷிப் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டில் மல்லோர்கா சாம்பியன்ஷிப் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி - அல்பனோ ஆலிவெட்டி (பிரான்ஸ்) ஜோடி, அமெரிக்காவின் வித்ரோ- லம்மோன்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அமெரிக்காவின் வித்ரோ- லம்மோன்ஸ் ஜோடி 7-6 (23-21), 6-4 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி - அல்பனோ ஆலிவெட்டி (பிரான்ஸ்) ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

மேலும் செய்திகள்