< Back
டென்னிஸ்
மல்லோர்கா ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

கோப்புப்படம்

டென்னிஸ்

மல்லோர்கா ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
25 Jun 2024 9:22 PM IST

நாளை நடைபெற இருக்கும் காலிறுதியில் பாம்ப்ரி இணை அமெரிக்காவின் வித்ரோ- லம்மோன்ஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.

மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டில் மல்லோர்கா சாம்பியன்ஷிப் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில்

இந்தியாவின் யூகி பாம்ப்ரி - அல்பனோ ஆலிவெட்டி (பிரான்ஸ்) ஜோடி, இந்தியாவின் என். ஸ்ரீராம் பாலாஜி- லூக் ஜான்சன் (இங்கிலாந்து) ஜோடியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாம்ப்ரி ஜோடி 6-3, 6-3 என நேர் செட் கணக்கில் இந்தியாவின் என். ஸ்ரீராம் பாலாஜி- லூக் ஜான்சன் (இங்கிலாந்து) ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் யூகி பாம்ப்ரி இணை காலிறுதிக்கு முன்னேறியது. நாளை நடைபெற இருக்கும் காலிறுதியில் பாம்ப்ரி- ஆலிவெட்டி ஜோடி அமெரிக்காவின் வித்ரோ- லம்மோன்ஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்