< Back
டென்னிஸ்
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் பிரனாய்
டென்னிஸ்

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் பிரனாய்

தினத்தந்தி
|
13 Jan 2023 1:24 AM IST

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பிரனாய் கால்இறுதிக்குள் நுழைந்தார்.

கோலாலம்பூர்,

மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் 21-9, 15-21, 21-16 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் சிகோ ஆரா டிவி வார்டோயோவை போராடி வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 22-20 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் முகமது ஷோஹிபுல் பிக்ரி- பகாஸ் மலானா இணையை வீழ்த்தி கால்இறுதியை எட்டியது. பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்- திரீஷா ஜாலி ஜோடி 13-21, 21-15, 17-21 என்ற செட் கணக்கில் பல்கேரிய சகோதரிகள் கேப்ரியலா ஸ்டோவா- ஸ்டெபானி ஸ்டோவா கூட்டணியிடம் வீழ்ந்தது.

மேலும் செய்திகள்