< Back
டென்னிஸ்
மாட்ரிட் டென்னிஸ்: ரபேல் நடால் அபார வெற்றி

Image Courtesy : @MutuaMadridOpen

டென்னிஸ்

மாட்ரிட் டென்னிஸ்: ரபேல் நடால் அபார வெற்றி

தினத்தந்தி
|
26 April 2024 1:38 AM IST

அமெரிக்க வீரர் டார்வின் பிளான்சை வீழ்த்தி ரபேல் நடால் வெற்றி பெற்றார்.

மாட்ரிட்,

களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜாமி முனார் (ஸ்பெயின்) 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் நுனோ போர்கசை (போர்ச்சுகல்) வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதையடுத்து மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரான ரபெல் நடால்(ஸ்பெயின்), டார்வின் பிளான்ஸ்(அமெரிக்கா) உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் நடால் 6-1, 6-0 என்ற நேர் செட்டில் டார்வின் பிளான்சை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

மேலும் செய்திகள்