மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
|களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
மாட்ரிட்,
களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய பிரிட்ஸ் 2வது செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரிட்ஸ் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை வீழ்த்தினார்.
இதன் மூலம் டெய்லர் பிரிட்ஸ் 6-1, 3-6, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோத உள்ளார்.