< Back
டென்னிஸ்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா சாம்பியன்..!
டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா சாம்பியன்..!

தினத்தந்தி
|
7 May 2023 4:33 PM IST

மாட்ரிட் ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், பெலாரஸ் வீராங்கனை சபலென்காவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சபலென்கா 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மேலும் செய்திகள்