< Back
டென்னிஸ்
டென்னிஸ்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கிய முன்னாள் நம்பர் 1 வீராங்கனை
|25 April 2024 9:10 AM IST
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நேற்று தொடங்கியது.
மாட்ரிட்,
களிமண் தரைபோட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-4, 6-1 என்ற நேர் செட்டில் கிரீட் மினெனை (பெல்ஜியம்) தோற்கடித்து வெற்றியோடு தொடங்கினார். இவர் தனது அடுத்த சுற்று ஆட்டத்தில் லியுட்மிலா சாம்சோனோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜாமி முனார் (ஸ்பெயின்) 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் நுனோ போர்கசை (போர்ச்சுகல்) வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.