< Back
டென்னிஸ்
டென்னிஸ்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|27 April 2024 8:32 AM IST
அல்காரஸ் அடுத்த சுற்று ஆட்டத்தில் தியாகோ செய்போத் வில்டுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்
மாட்ரிட்,
களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறுது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஆன கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அலெக்சாண்டர் செவ்சென்கோவை (கஜகஸ்தான்) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இவர் தனது அடுத்த சுற்று ஆட்டத்தில் தியாகோ செய்போத் வில்டுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
இதன் பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் மக்டா லினெட்டை (போலந்து) வீழ்த்தினார்.