< Back
டென்னிஸ்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம்
டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
3 May 2023 8:32 PM GMT

பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா எகிப்து வீராங்கனையை வீழ்த்தி அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான அரினா சபலென்கா (பெலாரஸ்) சரிவில் இருந்து மீண்டு வந்து 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார்.

அதே போல் ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வெளியேற்றி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

மேலும் செய்திகள்